vishnuchittan

Wednesday, January 25, 2006

கிளியின் கிளி


கோலச்சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் தென் திருமல்லிநாடி செழுங்குழல் மேல்
மாலைதொடை தென்னரங்கற்கீயும் ம்திப்புடைய
சோலைக்கிளி அவள் தூயநற்பாதம் துணை நமக்கே.

இது சோலைக்கிளியான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு தினந்தோறும் சமர்ப்பிகப்படும் இலையினாலான கிளி.

மென்னடையன்னம் பரந்து விளையாடும்
வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால்
என் பொருகயற்கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி
எடுத்தவென் கோலக்கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே
உலகளந்தான் வரக்கூவாய்.

குயிலே, அன்னங்கள் விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உறையும் வடபத்திரசாயியின் பொன்னடிகளைக் காணும் ஆசையினால் என் கண்கள் உறங்கவில்லை. இனிய பால் மற்றும் சோறு ஊட்டி வளர்த்த என் கிளியை உன்னோடு தோழமை கொள்விக்கிறேன். நீ உலகளந்த மாலவனை வரக் கூவாய்

என்கிறாள் ஆண்டாள்.

இந்தப் படத்தில் உள்ள கிளி தினந்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூரின் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாரால் உடம்புக்கு இலை, மூக்கிற்கு ஒரு பூவின் இதழ் ம்ற்றும் கண்ணுக்கு காக்காய்ப்பொன் எனப்படும் Mica ஆகியவற்றால் செய்யப்பட்டு ஆண்டாளுக்குச் சமர்ப்பிக்கப் படுகிறது.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது