மன்னு குறுங்குடியாய் 5
.
முன்னிலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன்
மொடு மொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன்
பெயர்ந்தடியிடுவது போல்
பன்னிய்லகம் பரவியோவாப் புகழ்ப்
பலதேவனென்னும்
தன்னம்பியோடும் பின் கூடச்செல்வான்
தளர்நடை நடவானோ
இந்த பெரியாழ்வாரின் பாசுரத்தில் ஒரு சுவாரசியமான செய்தி இருக்கிறது.
வெள்ளிப் பெருமலைக்குட்டனான பலராமன் மொடு மொடு விரைந்தோடுகிறான். அவன் பின்னே கருமலைக்குட்டனான கண்ணன் மெதுவாகப் பெயர்ந்தடியிடுகிறான். ஏனென்றால் அவன்
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணை விழுங்கி அருகிருந்த மோரார்குடமுருட்டி
என்ற படி வெண்ணை மிகுதியாக உண்டதால் வேகமாக நடக்க முடியாமல் பெயர்ந்தடியிட்டு நடக்கிறான்.
திருக்குறுங்குடியின் கோபுரத்தின் இடது உட்புறத்தில் அமைந்துள்ள இந்த நவனீத க்ருஷ்ணன் சிற்பம் வெண்ணைஉண்ட மொழு மொழு கண்ணனாக அழ்காகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது
0 Comments:
Post a Comment
<< Home